Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் இன்னும் யூனிவர்ஸ் பாஸ்தான் – சொன்னதை செய்த கெய்ல் !

Advertiesment
நான் இன்னும் யூனிவர்ஸ் பாஸ்தான் – சொன்னதை செய்த கெய்ல் !
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (09:02 IST)
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது தனது அதிரடி சதத்தின் மூலம் தான் இன்னமும் யூனிவர்ஸ் பாஸ்தான் என்பதை கிறிஸ் கெய்ல் நிரூபித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வருகிறது இங்கிலாந்து. முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்றக் கணக்கில் இழந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக உலகக்கோப்பை தொடரோடு தனது ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ‘தான் இன்னமும் யூனிவர்ஸ் பாஸ்தான்’ எனத் தன்னம்பிக்கையோடுக் குறிப்பிட்டிருந்தார். தான் சொன்னதை இந்தப் போட்டியில் அடித்த சதத்தின் மூலம் உலகிற்கு நிரூபித்துள்ளார்.
webdunia

இந்தப் போட்டியில் சதம் அடித்த கிறிஸ் கெய்ல் 129 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார். இதில் 12 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியின் 12 ஆவது சிக்ஸரை கெய்ல் அடித்தப்போது சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியிடம் இருந்து அவர் பறித்துள்ளார்.

ஷாகித் அப்ரிடி 524 சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்ஸர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால் கெயில் 444 போட்டிகளில் 477 சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையைத் தகர்த்துள்ளார். இதுவரை கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டியில் 276 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 103 சிக்ஸரும் டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியைக் கண்டு அழுகும் குழந்தை... வைரலாகும் வீடியோ