Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்ஜே பாலாஜியின் எல்.கே.ஜி திரைவிமர்சனம்

ஆர்ஜே பாலாஜியின் எல்.கே.ஜி திரைவிமர்சனம்
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (09:21 IST)
தமிழில் பல அரசியல் படங்கள் வந்திருந்தாலும் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த படம் சிறப்பான புரமோஷனால் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் நிறைவு செய்தார்களா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
 
லால்குடியின் வார்டு கவுன்சிலரான ஆர்.ஜே.பாலாஜி, ஆயுள் முழுவதும் கவுன்சிலராக இருக்க விரும்பாமல் அடுத்தடுத்த கட்டத்தை அடைய விரும்புகிறார். குறிப்பாக தனது தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சிஎம் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை. அதற்கு தடையாக உள்ளவர்களை உடைத்தெறிந்து அவர் செய்யும் தில்லுமுல்லுகள் தான் இந்த படத்தின் மீதிக்கதை
 
வார்டு கவுன்சிலர் கேரக்டரில் முதல் அரை மணி நேரம் அதகளப்படுத்துகிறார் ஆர்.ஜே.பாலாஜி. உள்ளூர் காண்ட்ராக்டரை மிரட்டுவது, புகழ் பெற்ற பள்ளி பிரின்சிபலை மிரட்டி சீட் வாங்குவது என போகும் அவரது கேரக்டர், கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரி ப்ரியா ஆனந்துடன் சேர்ந்த பிறகு ஜெட் வேகம் எடுக்கின்றது. ஆர்.ஜே.பாலாஜியும் ப்ரியா ஆனந்தும் சேர்ந்து எடுக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சுவாரஸ்மாக உள்ளது. இந்த இரண்டு கேரக்டர்களும் இந்த படத்தின் தூண்கள் என்று சொல்லலாம்
 
நாஞ்சில் சம்பத்தை இயக்குனர் வீணடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது அழகிய மேடை பேச்சுகளை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். அவரை ஒரு உதவாக்கரை அரசியல்வாதியாக படத்தில் காட்டியுள்ளனர். இருப்பினும் கடைசி பத்து நிமிடங்கள் அவரது காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது
 
ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, ராம்குமார் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர். லியோ ஜேம்ஸ் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. 
 
webdunia
இயக்குனர் பிரபு இன்றைய அரசியல் சூழலை வைத்து சரியான படம் ஒன்றை கொடுத்துள்ளார். அதற்கு ஆர்.ஜே.பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனம் பெருமளவில் உதவி செய்துள்ளது. ஒரு அரசியல்வாதி வாழ்வதும், வீழ்வதும் கார்ப்பரேட் நிறுவனத்தால் தான் என்பதையும், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் எவ்வளவு பெரிய ஆளையும் வீழ்த்திவிடும், சாதாரண வார்டு கவுன்சிலரை கூட முதல்வராக்கிவிடும் என்ற உண்மை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் புதிது. சமூக வலைத்தளங்களில் ஏற்படும் கிறுக்குத்தனமான டிரெண்ட், மீடியாக்களின் பொறுப்பின்மை, காசு கொடுத்தால் எதிரிக்கும் வேலை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என கதையை காமெடியாக மட்டுமின்றி கொஞ்சம் சீரியஸாகவும் கொண்டு சென்றுள்ளனர். ஒரு மோசமான அரசியல்வாதி உருவாகுவது மக்களால் தான் என்பதை அழுத்தமாக கூறியுள்ளது இந்த படம். அரசியலை மாற்ற வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கும் சுயேட்சை வேட்பாளர்களை பொதுமக்கள் கண்டுகொள்வதே இல்லை என்ற வாதமும் இதுவரை யாரும் சொல்லாத கோணம். 
 
மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான அரசியல் ஆடுபுலி ஆட்டக்கதை தான் இந்த எல்.கே.ஜி
 
ரேட்டிங்: 3/5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டேன்: பிரபல நடிகர் ஓப்பன் டாக்!!!