Publish Date: Wed, 23 Dec 2020 (09:08 IST)
Updated Date: Wed, 23 Dec 2020 (09:09 IST)
திருமங்கலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்ற அமைச்சர் உதயகுமார் தொண்டர் ஒருவரை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். பல கிராமங்களுக்கு பயணித்து அவர்களுக்கு மாஸ்க், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய அமைச்சர், சாத்தங்குடி கிராமத்திலும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு புறப்பட தயாரானார். அப்போது குறுக்கே வந்த தொண்டர் ஒருவரை பிடித்து வேகமாக தள்ளி விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் ஏன் அந்த தொண்டரை தள்ளிவிட்டார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிய வரவில்லை.