Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2020 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்: மறக்க முடியாத வருடம் இது??

2020 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்: மறக்க முடியாத வருடம் இது??
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (22:01 IST)
எந்தவொரு வருடத்திலுமே சந்தித்திராதவொரு பெரியதுக்கமும் ஏக்கமும் வறுமையும் நோய்தாண்டமும் இறப்புவிகிதமும் உலகம் மக்கள் தொகையில் அதிகம்கூடியுள்ள வருடமாக இந்த 2020 ஆம் வருடமுள்ளதாகவே எடுத்துக்கொண்டாலும், கெட்டதிலும் ஒரு நல்லதுள்ளது என்றே நாம் நேர்மறையுடன் எடுத்துக்கொள்வோம்.

இன்றுள்ள நாளை நாளைக்குக் காணமுடியாது; ஆனால் இன்றைய நாளில் நாம் காணக்கிடைத்த நிகழ்ச்சிகளும் அதன்மூலம் நமக்குக் கிடைத்திருக்கிற அனுபவங்களும் வாழ்வின் சதாகாலமும் நம்முடன் இருந்து, இதைபோல் அடுத்தெதுவும்  நிகழ்கிறபோதே அல்லது நிகழ்வததற்கேதுவான காலழ்சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான சகுனம் தென்படுமாயின் அதை எதிர்கொள்வதற்காக ஒரு பக்குவத்திற்கு நம்மைத்தயார் படுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த ஆண்டை நாம் ஏன் கருதக்கூடாது.

எப்போதும் இன்பத்திலேயே லயித்திருப்பவனின் கண்களில் அடுத்தவரின் வலிகளும் வறுமைகளும் எப்படிக் கோட்டோவியம் போல மின்னித்தெரியும்?

உலகில் ஆகப்பெரும்செல்வந்தன் முதல்  அடிமட்டத்தொழிலாளி வரை அனைவருக்கும் வாழ்வும், சாவும் ஒன்றுதான். அதன் நிலைப்பாடு வேறு என்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூறப்பட்டுவந்தவைகளும் கூட இந்தக் கொரொனா சீசனில் அந்த விதியின் தலையெழுத்தையே முற்றிலும் மாற்றிப்போட்டுச்சென்றுள்ளது இந்த உலகத்தின்போக்கிற்கும் உலகவுயிர்களுன் மனதிற்குள்ளும் ஒரு ஞானோதயத்தைக் காட்டி அனைவரையும் நேசிக்கும் அன்பையும் மனிதநேயம்கொண்டு பார்க்கும் மனிதாபிமானத்தையும் கொடுத்திருப்பதாகவே நாம் எடுத்துக்கொள்வோம்.

ஒரிரு தொழில் அல்லது பலதொழில், கட்டுக்கட்டாய்ப் பணம், வங்கி, ரயில்நிலையம்ம், நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டுக் கண்டம், வீடுவிட்டு வீடு, தெருவிட்டு தெரு,சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலை, கிராமச்சாலை என எல்லாவற்றையும் இந்த தீநுண்மி எனப்படும் கொரோனா மாற்றிபோட்டும் தமது தொழில்நுட்ப உலகத்தையே அது ஒரு புரட்டிப்போட்டுவிட்டதே. மண்ணிலிருந்து விண்ணிற்கு பாலம்போடுவதுபோல் மேகத்தைக் கிழித்துக்கொண்டு, விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோளுக்கு கொடுக்கும் பிரதிநிதித்துவம் இரண்டாம் உலகப்போருக்குபின், பலவேறு உலக நாடுகளில் ஏற்பட்ட கடும் பணவீக்கத்திற்குப் பின், இந்த கொரோனாப்பிணி என்பது நிச்சயம் மனிதர்கள் மேலும் கொஞ்ச நஞ்சமிருக்கும் ஜீவாத்துமா நேசத்தை உயிர்ப்பிக்கச்செய்துள்ளது.
webdunia


அத்தனை கடவுள்களையும் யாவரும் வேண்டினாலும் நம் முன் காணக்கிடைத்த கடவுள்கள் மருத்துவர்களும், செவிலியர்களும், போலீஸாரும், சுகாதாரப்பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும், தனது சொத்தை அடமானம் வைத்து, பரலோகம் சென்ற தன் பெற்றோர் தன் செயல்களைப் பார்த்துப் பாராட்டிவருவதாகக் கூறிவரும் நடிகர் சோனு சூட்போன்ற தன்னலம் கருதாதவர்களின் மனிதநேயமாண்பில்தான் இப்பூமியில் மலர்களும் பூக்கின்றன. கார்மேகத்திமிலிருந்து மழையும் பொழிகின்றது.

இந்த உலகில் மறைந்துபோவதுபோலிருந்த மெல்லியமனிதநேயத்தையும் இயற்கையெழிலூட்டத்தையும் மீட்டெடுப்பதற்காகவேண்டும் இந்த இயற்கை நமக்குக்கொடுத்துள்ளதொரு பொன்னாவ வாய்ப்பாகவே எதையும் நாம் எடுத்துக்கொள்வோம்.

இழப்புகள் என்பது தவிர்க்கமுடியாது என்றாலும்  எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டு, நிசர்சன வாழ்கையில் போக்கை அனுசரித்து வாழ்வதுதாம் நாம் அடுத்தகட்டபாய்ச்சலுக்கு நம்மைத்தயார் படுத்தும்.

கடந்ததை நாம் ஒருநாளும் மறக்கமுடியாது என்ற பல துக்கங்கள் நம் இதயமுமுழுவதும் நிறைந்துள்ளதுதென்றாலும் எதையும் தாங்கும் இதயத்தைக் கைவரப்பெறவே நாம் நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவும் சில நிகழ்வுகள் நமக்குப் பக்குவம் சொல்ல வருவதாக எடுத்துக்கொள்வோம்.

இந்த உலகில் எதோவொன்றானாலும் ஒன்றையொன்றோ சார்துதானே வாழ்கிறது. தங்க பஷ்பமே சாப்பிட்டு வளர்ந்தாலும் ஒருநாள் மண்ணில் இறக்குமதியாகப்போகிறோம்…நாம் பலகோடி கொடுத்து வாங்கிய பொருட்களும் நீடித்துநிலைப்பெறப்போவதில்லை எனும்போது, நாம் இழந்த ஒன்றினை நினைக்கலாமே ஒழிய அதை நினைத்தே வாழவேண்டிய கட்டாயம் எதுவும் நம்மை நிர்பந்திக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

காலமும் நேரமும் யாவருக்கும்போதுவானது.

இழப்பும் அதேபோல்தான். என்ன முன்னுக்குப்பின் அதன் நேரமும் காலமும் மாறுபடலாம் என்பதை திடமனதுடன் எடுத்துக்கொண்டால் இனியிங்குத் துயரத்தூண்டில்கள் நம்மைப்பிடிக்க எத்தனிக்காது.

நாமும் தற்போதைய மனக்கவலைகளிலிருந்து நிவாரணம் பெற நமது உழைப்பும்  உத்வேகமும் உதவலாம்.

சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 வயது சிறுவனுக்கு Youtub- ல் ரூ.220 கோடி வருமானம்!