Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

Advertiesment
Minister Udayanidh's response
, சனி, 15 ஜூலை 2023 (21:56 IST)
விளையாட்டு வீரர்களை அதிகம் கொண்ட பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf வழங்கப்பட்டிருந்தது. இதற்கு  பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தன் டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதியிடம்  ’’மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் கவனத்திற்கு பாளையங்கோட்டை  அண்ணா விளையாட்டு  மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப்(Hockey turf)அனுப்பி  வைக்கப்பட்டிருக்கிறது’’ என்று  தெரிவித்திருந்தார்.

இதற்கு அமைச்சர் உதய நிதி தன் டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது:

‘’அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்,

சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf–ஐ அமைக்கவுள்ளோம்.

மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.

விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம்.

புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும்.

அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

நன்றி.'' என்று தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை