திமுகவினரின் முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதன் இரண்டாம் பாகத்தை இம்மாத இறுதியில் வெளியிட இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த இரண்டாம் பட்டியலில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற பிரமுகர் தான் அதிகம் உள்ளனர் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திமுகவினருக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட பினாமிகள் குறித்த தகவல் இரண்டாவது பைலில் இருக்கும் என்றும் திமுகவினரின் ரத்த சொந்தமும் அதில் இருக்கிறது என்றும் அது சம்பந்தமான புகைப்படமும் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பினாமிகளின் பெயர்களை பொதுவெளியில் சொல்லலாமா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் பினாமிகள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆதாரங்களை சிபிஐயிடம் வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டுக்குள் சிபிஐ வரக்கூடாது என தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்புக்கு உள்ளது என்றும் எனவே இந்த ஆவணங்களை ஆளுநரிடம் சீல் வைத்து வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.