Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம்’’- அமைச்சர் அன்பில் மகேஷ்

Advertiesment
’’நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம்’’- அமைச்சர் அன்பில் மகேஷ்
, சனி, 15 ஜூலை 2023 (18:25 IST)
நடிகர் விஜய் இலவச கல்விப் பயிலகம்  இன்று தொடங்கவுள்ள நிலையில்,மாணவர்களுக்கு விஜய் செய்வது நல்ல விஷயம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் இன்று முதல் (ஜூலை 15 ஆம் தேதி) காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக  நேற்று முன் தினம் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அனுப்பினார்.

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய மக்கள் இயக்க நற்பணிகளைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில், இரவு நேர பாடசாலையை தொடங்க விஜய் முடிவெடுத்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விஜய்யின் இந்த கல்வி பயிலகத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் பாராட்டினார்.

இந்த நிலையில், இன்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர்,  மாணவர்களுக்கு விஜய் செய்வது நல்ல விஷயம்,தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வியின் நோக்கமும் இதுதான். நடிகர் விஜய்யும் இப்பணியைச் செய்தால், அவர்களின் தன்னாவலர்களும் நம்மோடு இணைந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை’ திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்