டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முடிவுகள் காலதாமதமாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் இது குறித்து அமைத்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் இல்லை என்றும் தேர்வு மதிப்பீட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசின் தேர்வாணைய செயல்திறனை விட மாநில அரசின் தேர்வாணைய செயல் திறன் எந்த வகையிலும் குறைவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்து தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தற்போது 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பீட்டு பணிகள் முடிந்து விட்டது என்றும் எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் இந்த ஆண்டில் மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் மேலும் 8000 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்குவார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்