Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் விலக்கு கோரும் கையெழுத்து இயக்கம்.. கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து வாங்கிய உதயநிதி..

alagiri
, வெள்ளி, 3 நவம்பர் 2023 (12:44 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் விலக்கு கோரி திமுக சார்பில் அக்.21ல் கையெழுத்து இயக்கம் தொடங்கிய நிலையில் பல்வேறு தரப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் வகையில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரபலங்கள், தொண்டர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.

 நீட் தேர்வு இந்தியாவில் காங்கிரஸ் காலத்தில் தான் முதன் முதலாக கொண்டு வரப்பட்டது என்பதும், நீட் தேர்வு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த போது காங்கிரஸ் எம்பி ப சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி,  நீட் தேர்வு அமல்படுத்தப்படும் என்ற தீர்ப்பை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.-. தினகரன்