Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரனின் கடிதம்: அமைச்சர் வேலுமணி பதில்!

Advertiesment
ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரனின் கடிதம்: அமைச்சர் வேலுமணி பதில்!
, புதன், 3 ஜனவரி 2018 (18:44 IST)
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரன் தனது தொகுதி பிரச்சனை தொடர்பாக எழுதிய கடிதத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துள்ளார்.
 
சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய டிடிவி தினகரன் கடந்த 29-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இவர் வரும் 80-ஆம் தேதி தனது முதல் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
 
இந்நிலையில் தனது தொகுதியான ஆர்கே நகரில் எந்தெந்த வார்டுகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டது என தினகரன் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அமைச்சர், சில இடங்களில் பைப்லைன் உடைந்து கழிவுநீர் கசிவதாக புகார்கள் வரும். புதுவிதமான புகார்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. எதுவாக இருந்தாலும் உடனடியாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ராஜினாமா செய்ய வேண்டும்: தினகரன் தரப்பு அதிரடி!