மீண்டும் தள்ளிபோகிறதா பொதுத்தேர்வு? செங்கோட்டையன் அவசர ஆலோசனை!!

செவ்வாய், 19 மே 2020 (10:24 IST)
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அவசர ஆலோசனை.
 
தமிழகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
 
ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறவிருக்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே பேட்டியளித்தார்.  
 
தேர்வுகள் நடைபெற மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தனிமனித இடைவெளியுடன் இந்த தேர்வு நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில் தேர்வு நடத்துவதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
இதனிடையே தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 
 
எனவே மீண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஏமாற்றிய மதுப்பிரியர்கள்: தலையில் துண்டு போட்ட அரசு??