Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலையை அடிமட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

Advertiesment
sekar babu

Mahendran

, வியாழன், 20 பிப்ரவரி 2025 (10:57 IST)
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றைய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, நலத்திட்டங்கள் நடைபெறுவதையும், நாளுக்கு நாள் கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் பார்த்து பாஜகவினர் வயிற்று எரிச்சல் அடைந்துள்ளனர் என்றார்.

கோயில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும், திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 112 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் மூன்றரை கோடி பேர் பயன் அடைகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

"எங்கள் இயக்கம் அடிக்க  அடிக்க உயரும்  பந்து, தீட்ட தீட்ட ஒளிரும் வைரம்; காய்ச்ச காய்ச்ச மெருகேறும் சொக்கத்தங்கம். அதனால் அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும், நாங்கள் வீறுநடை போடுவோம்," என்று அவர் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். "களத்திற்கு வாருங்கள், எங்கள் கட்சியின் சாதாரண அடிமட்ட தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடித்து காட்டுவோம்," என்றும் அவர் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!