டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, ரேகா குப்தாவை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து ஒருமனதாக ரேகாவை தேர்வு செய்தனர்.
இதனை அடுத்து, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் 12:35 மணிக்கு முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கட்டமாக, முதலமைச்சருடன் சேர்ந்து ஆறு அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். அதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.