Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்! – அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:37 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களில் மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. வழக்கமான கொரோனா மற்றும் வீரியமடைந்த ஒமிக்ரான் பரவல் இரண்டுமே அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் அதிகரித்துள்ளது. சென்னை அசோக் நகரின் எல்.ஜி.ஜிஎஸ் காலணி பகுதியில் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். 17வது தடுப்பூசி முகாம் புத்தாண்டிற்கு அடுத்த நாள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments