Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகையின் சொத்தை அபகரிக்க முயல்கிறார் மன்சூர் அலிகான்… காவல் நிலையத்தில் புகார்!

Advertiesment
நடிகையின் சொத்தை அபகரிக்க முயல்கிறார் மன்சூர் அலிகான்… காவல் நிலையத்தில் புகார்!
, புதன், 29 டிசம்பர் 2021 (09:44 IST)
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான கே டி ருக்மணிக்கு சொந்தமான வீடு ஒன்றை அரசு சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.

மறைந்த நடிகை கே டி ருக்மணியின் சொத்துகளை பராமரிக்க இடைக்கால நிர்வாகியை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1996 ஆம் ஆண்டு நிர்வகித்தது. இதையடுத்து ருக்மணிக்கு சொந்தமான வீட்டை நிர்வகிப்பது உள்ளிட்ட வேலைகளை சொத்தாட்சியர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இது சம்மந்தமாக ஆய்வு நடத்த இடைக்கால நிர்வாகி சென்ற போது கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும், அதில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அந்த வீட்டை அபகரிக்க நடிகர் மன்சூர் அலிகான் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக அரசு சொத்தாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவருக்கு எதிராக தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''மாமனிதன்'' படத்திற்கு சென்சார் சான்றிதழ்....