வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே மேல்முறையீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.