Publish Date: Tue, 02 Nov 2021 (19:19 IST)
Updated Date: Tue, 02 Nov 2021 (19:22 IST)
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறிய போது அதிமுக ஆட்சியில் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினர் சார்பில் வரவேற்கிறேன்
சமூக நீதி நிலைத்திருக்க வேண்டுமானால் தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே நல்லது. அதுவே அனைத்து சமுதாய மக்களை நல்வழிப்படுத்த சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்று கூறியுள்ளார்