சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்மொடி குற்றவாளி என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்த நிலையில் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட் இன்று அறிவிக்கவுள்ளது. இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்ளும் முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்மொடி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தாலும் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்