Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இ பாஸ் நிலை என்ன? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தமிழகத்தில் இ பாஸ் நிலை என்ன? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:07 IST)
தமிழகத்தில் இ பாஸ் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் வாங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 

தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்கள் எல்லாம் இந்த நடைமுறையை ரத்து செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.  இதனால் தமிழகத்திலும் இ பாஸ் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப் பட்ட நிலையில் ’அதுகுறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் ’ என்ற மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: ஒரே நாளில் 63,631 பேர் !!