Publish Date: Sat, 22 Aug 2020 (18:06 IST)
Updated Date: Sat, 22 Aug 2020 (18:08 IST)
இந்தியாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 63,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் என தகவல்.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய தகவலின்படி இந்தியாவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 63,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாட்டில் கொரொனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 74.69% ஆக உள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.