Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் வீட்டுக்கே வந்து… என்னை படுக்கறையில் தள்ளி துன்புறுத்தினார் – விஜய் பட நடிகை குற்றச்சாட்டு!

Advertiesment
என் வீட்டுக்கே வந்து… என்னை படுக்கறையில் தள்ளி துன்புறுத்தினார் – விஜய் பட நடிகை குற்றச்சாட்டு!
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (17:37 IST)
சச்சின் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிபாஷா பாசு.

இவர் அதன் பின் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் அவை எல்லாமே கவர்ச்சிகரமான வேடங்களாக அமைந்தன. சமீபத்தில் கூட தனது கணவருடன் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் டேஞ்சரஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அதன் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் பாலிவுட்டில் வாய்ப்பு தேடிய ஆரம்ப நாட்களில் தனக்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் ஏற்பட்ட கசப்பான சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில் ‘எனக்கு வாய்ப்பு தருவதாக ஒரு நபர் கூறினார். அதனால் அவரை நம்பி என் வீட்டு முகவரியைக் கொடுத்தேன். என் வீட்டுக்கு வந்த அவர் வீட்டை சுற்றி பார்த்தார். அப்போது படுக்கை அறைக்கு சென்றார். நானும் பின்னாடி செல்ல என்னை படுக்கையில் தள்ளி என் மேல் ஏறி அமர்ந்து துன்புறுத்தினார். நான் கத்தி கூச்சல் போட்டதால் என்னைவிட்டு சென்றார்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணைந்ததா ஓவியா ஆரவ் காதல் ஜோடி?