ரிங் மாஸ்டர் தினகரன் மீது கட்சியினர் சீற ஆரம்பித்துவிட்டனர் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் நேற்று வெட்ட வெளிச்சமாகி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தங்க தமிழ்செல்வன் தனது அடுத்த நடவடிக்கை அமைதி காப்பது மட்டும்தான். நான் கட்சியிலும் இணையவில்லை என அறிவித்துவிட்டார். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் டிடிவி தினகரன் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜெயகுமார் கூறியதாவது, ரிங் மாஸ்டர் போல செயல்பட நினைத்த தினகரன் மீது அவர் கட்சியினரே சீற ஆரம்பித்துவிட்டனர். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என இந்த மூன்று இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும் என தெரிவித்தார்.
அதன் பின்னர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைக்கப்படுவாரா என கேட்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவில் இணையாலாம். தங்க தமிழ்செல்வனை கட்சியில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவி செய்யும் என தெரிவித்துள்ளார்.