டிடிவி தினகரன் நேற்று தங்க தமிழ்செல்வன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் நேற்று வெட்ட வெளிச்சமாகி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், தங்க தமிழ்செல்வன் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என என்னை யாரும் இயக்கவில்லை. நான் அவர்களிடம் பேசவில்லை. நான் விமர்சனம் வைக்கத்தான் செய்வேன். அதை தாங்கிக் கொண்டு தலைமை அழைத்து பேசியிருக்க வேண்டும். அதேபோல் நான் நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின.
தினகரன் கட்சி வேலைகளை பார்க்காமல் பொய் பேசி வருகிறார். கூவத்தூர், புதுச்சேரி, கர்நாடகாவில் எங்களை அடைத்து வைத்தது ஏன்? தினகரன் கட்சி தலைவர் போல் செயல்படாமல் பயங்கரவாத அமைப்பின் தலைவர் போல் செயல்படுகிறார். அவரிடம் பொட்டி பாம்பாக அடங்க அவர் என்ன எனக்கு சோறா போடுகிறார்?
அதோடு, எனது அடுத்த நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான். ஊடங்களில் விமர்சகராக வருவேன் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.