அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தேர்தல் கூட்டணி குறித்து பேசி திமுகவை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் தேர்தல் கூட்டணி குறித்து பேசி திமுகவை விமர்சித்துள்ளார். அவர பேசியதாவது...
அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்பிருக்கிறது. அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணி தற்போதே தள்ளாடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன் போன்றோர் மாறுபட்ட வகையில் பேசுகின்றனர். இதனால் தேர்தல் நெருங்கும் போது இக்கூட்டணி சிதறிவிடும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்த குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.