குஷ்புவை அடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறும் இன்னொரு பெண் பிரபலம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் மறைந்த கன்னியாகுமாரி எம்பி வசந்த குமார் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தன்னை ஒரு அரசியல்வாதி ஆகவே காங்கிரஸ் கட்சியினர் பார்க்கவில்லை என்றும் குஷ்பு குற்றம் சாட்டினார்
இந்த நிலையில் குஷ்புவை அடுத்து மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக இருக்கும் அப்சரா ரெட்டியும் காங்கிரஸிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறியபோது ’தான் ராகுல் காந்தி நம்பித்தான் காங்கிரஸின் இணைந்ததாகவும் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் பதவியை சரிவர செய்து வருவதாகவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து தனக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்பு வந்தாலும் தமிழகத்தில் இருந்து ஒரு அழைப்பு கூட தனக்கு வரவில்லை என்றும் தனது அதிருப்தியை தெரிவித்து கொண்டார்
திருநாவுக்கரசு தலைவராக இருக்கும் போது தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி குறித்த விபரங்கள் தனக்கு வரும் என்றும் ஆனால் கேஎஸ் அழகிரி தலைவரான பின் அவ்வாறு எந்த தகவல்களும் தனக்கு வரவில்லை என்றும் கூறினார்
அதே நேரத்தில் ஒரு சிலர் செய்யும் தவறால் காங்கிரஸில் உள்ள அனைவரையும் குற்றம் சாட்டமாட்டேன் என்று கூறிய அவர், கேஎஸ் அழகிரி மீது அதிருப்தியில் இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேஎஸ் அழகிரி மீதான அதிருப்தியால்தான் குஷ்பூ கட்சி தாவிய நிலையில் அப்சரா ரெட்டியும் கட்சி மாறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்