Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பசுவுக்கு போர்வை தருவோருக்கு துப்பாக்கி உரிமம்...அதிபயங்கர சலுகை!.. ராமதாஸ் கிண்டல் ’டுவீட்’

Advertiesment
பசுவுக்கு போர்வை தருவோருக்கு துப்பாக்கி உரிமம்...அதிபயங்கர சலுகை!.. ராமதாஸ் கிண்டல்  ’டுவீட்’
, திங்கள், 16 டிசம்பர் 2019 (13:57 IST)
ஏற்கனவே நாட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டும் கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவிவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 10 பசுக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால் துப்பாக்கி உரிமம் உடனடியாக வழங்கப்படும் என குவாலியர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு, பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார். 
அதில், மத்தியப் பிரதேசத்தில் 10 பசுக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால் துப்பாக்கி உரிமம் உடனடியாக வழங்கப்படும்: குவாலியர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - அடக் கொடுமையே.... பசுக்களுக்கு போர்வை கொடுத்தால் குற்றவாளிகள் கூட புனிதர்கள் ஆகிவிடுவார்களோ?
 
அதிசயம்... ஆச்சரியம்.... ஆனால் உண்மை. 10 பசுக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால்
அதிபயங்கர சலுகை. இது வேறெங்குமல்ல... மத்தியப் பிரதேசத்தில் தான்...... இதைவிடக் கொடுமை என்னவெனில் பசுவுக்கு போர்வை தருவோருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என்பது தான் அந்த அதிபயங்கர சலுகை! என பதிவிட்டுள்ளார்.
webdunia
சமீபத்தில், வட மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆடிய நடனப் பெண், சிறிது நேரம் இடைவெளி விட்டதால் ஒரு நபரால் முகத்தில் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி எஜமானர்களின் பாதம் பணிந்து...துரோகம் இழைத்திருக்கும் அதிமுக அரசு - ஸ்டாலின் குற்றச்சாட்டு!