Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்வேறு துறைகள் சார்பில் 2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எவ.வேலு!

Advertiesment
பல்வேறு துறைகள் சார்பில் 2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எவ.வேலு!

J.Durai

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (18:14 IST)
தமிழக முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்ட மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களை  தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 
 
இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ. வேலு கலந்துகொண்டு  2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
 
இதில் வருவாய் துறை,மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 
 
மேலும் பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறந்து வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு