Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல்! - அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
MK Stalin

Prasanth Karthick

, புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:56 IST)

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு சென்ற நிலையில் அவர் சென்ற விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இன்று முதல் மொத்தம் 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கும் முதல்வர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முதலீட்டாளர்களை சந்தித்து, ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

 

இதற்காக அவர் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்ட நிலையில், அவர் புறப்பட்டு சென்ற விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்ததால் அதிகாரிகள் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். 4 மணி நேர பயணத்திற்கு பின் விமானம் துபாயில் தரையிறங்கியது. அதற்குள்ளாக அது புரளி மிரட்டல் என்பது தெரியவந்ததையடுத்து, விமானம் புறப்பட்டு அமெரிக்காவை சென்றடைந்தது.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணிக்கும் விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை சுற்றி வரும் மழை மேகங்கள்! அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்!