Publish Date: Thu, 20 Jan 2022 (18:30 IST)
Updated Date: Thu, 20 Jan 2022 (19:13 IST)
பொங்கல் தொகுப்பில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கூறியுள்ளார்
பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருள் வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் குற்றம்சாட்டியிருந்தார்
இதற்கு பதிலளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ரூபாய் 500 கோடி ஊழல் என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது அப்பட்டமான பொய் என்றும் உரிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரமானதாக உரிய வகையில் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்
பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டும் உணவுத்துறை அமைச்சரின் பதிலும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது