Publish Date: Thu, 20 Jan 2022 (18:23 IST)
Updated Date: Thu, 20 Jan 2022 (19:05 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.36,704க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.36,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.4,588க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.