தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றவையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பை வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் பொங்கல் தொகுப்பு பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பொங்கல் தொகுப்பு குறித்து விமர்சித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “ரேசனில் தரப்பட்ட பொங்கல் பை தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்றவையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கமிஷன் நிறைய கிடைக்கும் என்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து ரேசன் பொருளை வாங்கியுள்ளனர்” என கூறியுள்ளார்.