பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்டான மாணவர்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது புது விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு நடந்த நிலையில் இந்த பொது தேர்வில் சுமார் 50000 பேர்களுக்கு மேல் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஆப்செண்ட் ஆன மாணவர்களில் பலர் தொழிற்பயிற்சி பாலிடெக்னிக் படித்து வருகின்றனர் என்றும் அவர்கள் டீசி வாங்காததால் மாணவர்களின் பெயர் வருகை பதிவேட்டில் இருந்தது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்
இந்த மாணவர்களீன் எண்ணிக்கையை கழித்தால்தான் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியும் என்றும் மாணவர்களின் ஆப்செண்ட் விவகாரம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புது விளக்கம் அளித்துள்ளார்.