ஒரு வருடத்தில் வெறும் மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆண்டிற்கு மூன்று நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தாலும் அவர்கள் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு குறைந்த பட்ச வருகை பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்கிறோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.