Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் மாநில சாரணர் உயர் விருதை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

anbil
, சனி, 28 ஜனவரி 2023 (23:39 IST)
கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியனுக்கு மெச்சத்தகுந்த நீண்ட சேவைக்கான மாநில சாரணர் உயர் விருது. சென்னை சாரணர் தலைமையகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். 
 
கடந்த 26 ஆம் தேதி சென்னையில் உள்ள பாரத சாரணர் இயக்க தமிழ்நாடு மாநில தலைமையகத்தில் 74வது குடியரசு தின விழா மற்றும் மாநில சாரணர் உயர் விருதுகள் வழங்கும் விழா மாநில பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்  நடைபெற்றது. 
 
அப்போது கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனின் மெச்சத்தகுந்த நீண்ட சேவையைப் பாராட்டி பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவருக்கு மாநில உயர் விருது வழங்கிப் பாராட்டினார். 
 
இவ்விழாவில் தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., மாநில தொடக்கப்பள்ளி இயக்குனர் அறிவொளி, மாநில ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் பழனிச்சாமி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் லட்சுமி, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் உள்ளிட்ட பல்வேறு கல்வித்துறை உயர் அதிகாரிகள், சாரணர் இயக்க மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
முனைவர் ராமசுப்பிரமணியன், கடந்த 19 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மாநில தேசிய உயர் விருதுகள் பெறக் காரணமாக இருந்தமை,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சாரணர் பயிற்சியில் ஈடுபடுத்தியமை, சாரணர் இயக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு உலக சாதனை நிகழ்வுகள், இளம் மாணவர்கள் மத்தியில் தாய்நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் பறைசாற்றும் வகையில் சாரண சாரணியர்களை தேசிய அளவில் முன்மாதிரியான நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்து வருதல் உள்ளிட்ட மெச்சத்தகுந்த பல பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நிறுவப்பட்டுள்ள புதிய மாநில சாரணர் கவுன்சிலில் மாநில சாரணர் உதவி ஆணையராக ராமசுப்பிரமணியன் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். 
 
திரு ராமசுப்பிரமணியன் மாநில சாரணர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டதற்கும், மெச்சத்தகுந்த நீண்ட சேவைக்காக மாநில உயர் விருது பெற்றதற்கும் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர். 
 
புகைப்படம்: 
 
கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும், சாரணர் இயக்க மாநில உதவி ஆணையருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியனின் மெச்சத்தகுந்த நீண்ட கால சிறந்த சேவையைப் பாராட்டி பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவருக்கு மாநில சாரணர் உயர் விருது வழங்கிப் பாராட்டினார். அருகில் தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., மாநில தொடக்கப்பள்ளி இயக்குனர் அறிவொளி, மாநில ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் பழனிச்சாமி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் லட்சுமி, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் மற்றும் பலர்A

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ரஜினியின் புகைப்படம், குரலைப் பயன்படுத்தினால் நடவடிக்கை''- ரஜினியின் வழக்கறிஞர் அறிவிப்பு