Publish Date: Wed, 27 Oct 2021 (09:21 IST)
Updated Date: Wed, 27 Oct 2021 (09:23 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே மேட்டூர் அணை நிரம்பியுள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. அதேசமயம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.