Publish Date: Mon, 20 Jul 2020 (16:43 IST)
Updated Date: Mon, 20 Jul 2020 (16:48 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவி கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் இதுவரை ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பத்து லட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒன்றை லட்சத்திற்கு மேல் பாதிப்பட்டுள்ளனர்.
இந்தத் தொற்றைத் தடுக்கம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை எப்போது என்பது குறித்து மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதில், ஊரடங்கிற்கு பிறகு பாதுகாப்பான முறையில் மீண்டும் மெட்ரோ ரயில்களை இயக்கத் தயார் என்றும் ரயில் நிலையம் முறையாக கிருமி நாசினியால் சுத்தம் செயப்பட்டும் எனவும் தெரிவித்துள்ளது.