வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கிய நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடல்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
முன்னதாக வங்க கடலில் உருவான யாஸ் புயல் கரையை கடந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.