Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2.94 கோடி பேருக்கு கொரோனா.. 3 கோடியை நெருங்கும் பாதிப்பு – இந்திய நிலவரம்

2.94 கோடி பேருக்கு கொரோனா.. 3 கோடியை நெருங்கும் பாதிப்பு – இந்திய நிலவரம்
, ஞாயிறு, 13 ஜூன் 2021 (09:38 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,94,39,989 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,303 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,70,384 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,80,43,446 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 10,26,159 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 25,31,95,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரும்பூஞ்சை மருந்து கள்ளச்சந்தையில் விற்றால்…? – அமைச்சர் கடும் எச்சரிக்கை!