முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

Mahendran
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (18:31 IST)
மேலகரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த பெண்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்தும் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்தும், பட்டா வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
 
அப்பகுதி பெண்கள் அளித்த மனுவில், சொந்த வீடு உள்ளவர்களுக்கு முறையான விசாரணை இல்லாமல் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 'புறம்போக்கு' என கூறிப் பணம் பெற்றுக் கொண்டு முதல்வர் நிகழ்ச்சியில் பட்டா வழங்க திட்டமிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாளை தென்காசிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவறாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, தகுதியுள்ள ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments