Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா காலத்தில் அசத்திய நெல்லை துணை ஆணையருக்கு பதக்கம்!

Advertiesment
கொரோனா காலத்தில் அசத்திய நெல்லை துணை ஆணையருக்கு பதக்கம்!
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:31 IST)
நெல்லை துணை ஆணையருக்கு பதக்கம்!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த போதிலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அந்த மாவட்டத்தின் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் உள்ளது 
 
அந்த வகையில் நெல்லை சட்ட ஒழுங்கு காவல் துறை ஆணையர் சரவணன் அவர்களின் தீவிர முயற்சி காரணமாக நெல்லையில் படிப்படியாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாஸ்க் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது குறித்து அவ்வப்போது நெல்லை சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் என்பதும் இந்தப் பதிவுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெல்லை சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் அவர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் சேலம் எஸ்பி தீபா கணிகர், மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ராணுவ மருத்துவமனை தகவல்