Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோவுக்கு சர்ஜரி முடிந்தது.. 40 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என துரை வைகோ தகவல்..!

durai vaiko

Siva

, புதன், 29 மே 2024 (11:49 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சர்ஜரி முடிவடைந்ததாகவும் அவர் 40 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும் துரை வைகோ தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்த நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் துரை வைகோ தனது சமூக வலைதளத்தில் வைகோவுக்கு சர்ஜரி நல்லபடியாக முடிந்து விட்டதாகவும் தோள்பட்டையில் மூன்று இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவு சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளதாகவும் 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து துரை வைகோ மேலும் கூறியதாவது:
 
தலைவர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார்..!
 
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
 
தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!