Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

Advertiesment
Mdmk vaiko

J.Durai

, திங்கள், 27 மே 2024 (14:35 IST)
மதிமுக குமரி மாவட்ட செயலாளர். வெற்றிவேலின் இல்லத் திருமண விழா  நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி எம் டி எம் திருமண மஹாலில் நடைபெற்றது,இதில் மதிமுக பொது செயலாளர்.வைகோ முதன்மைச் செயலாளர்.துரை வைகோ ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது,இந்நிலையில் அவரது மகன் துரை வைகோ மட்டும் நாகர்கோவிலில் நடைப்பெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்,அதன் பின்னர் மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
 
இதனை தொடர்ந்து மேடையில்  பேசுகையில்.....
 
வைகோ அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேலின் இல்ல திருமண விழாவில் தனது தந்தை மதிமுக பொதுச் செயலாளர். வைகோ அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது அதற்காக நேற்று தயாராகிய போது கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் திடீரென வழுக்கி விழுந்தார்.
 
இதில் தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டது உடனடியாக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சிகிச்சைக்கா புறப்பட்டார்  இதனால் வர இயலவில்லை என பேசினார்.
 
இந்த திருமண விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சுரேஷ் ராஜன், ஆஸ்டின், முன்னாள் குமரி மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மற்றும் பல்வேறு கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?