கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூரலிகான் அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து நடிகர் மன்சூரலிகானை நீதிமன்றம் விசாரித்து அவர் ரூ.2 லட்சம் சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றிய அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, இதுகுறித்து சென்னை வடபழனி காவல் நிலைய போலீசார் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது