சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் விலை நிர்ணயம் டாலர்கள் மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 75 டாலர்களை தாண்டியுள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.