எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

Bala
புதன், 19 நவம்பர் 2025 (14:07 IST)
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த பல நாட்களாகவே தமிழகத்தில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு எஸ்.ஐ.ஆர்(SIR) என்கிற விண்ணப்பம் கொடுக்கப்பட்டு அதை நிரப்பி கொடுக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. 
 
அதில் இருக்கும் தகவல்களை பலருக்கும் நிரப்ப தெரியவில்லை. அதில் 2002க்கு முன்பு நீங்கள் எங்கு வாக்கு போட்டீர்களோ அது தொடர்பான தகவல்களை பதிவிட வேண்டும் என சொல்லப்பட பலருக்கும் அந்த தகவல்கள் தெரியவில்லை.
 
எனது இந்த எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்ப பலருக்கும் குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது
. மாநில முழுவதும் 68,467 பேர் இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த SIR  படிவத்தை வைத்து தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் குற்றம் சொல்லி வருகிறார்கள்.
 
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் ‘யாருக்காவது SIR  பார்ம் பில்லப் பண்ண தெரியுமா?.. வக்கீலுக்கே தெரியலன்னு சொல்றேன்.. உன் தாத்தா யாரு? நீ ஏன் பொறந்த?.. உன் தாத்தா எங்க ஓட்டு போட்டாரு? உன் கொள்ளு தாத்தா எங்க ஓட்டு போட்டாரு? ன்னு கேட்ருக்காங்க.. எனக்கு ஒன்னும் புரியல.. நீங்கலாம் எங்கருந்துடா வந்தீங்க?.. எங்க ஓட்டை கேள்வி கேட்க நீங்க யாரு?’ என்றெல்லாம் கோபத்தில் பொங்கியிருக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments