Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் மந்தைவெளி பேருந்து நிலையம் இடமாற்றம்.. மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் மாற்றம்..!

Advertiesment
Chennai

Siva

, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (07:50 IST)
சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் பணிகள் காரணமாக நாளை அதாவது ஆகஸ்ட் 27 முதல் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
 
மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும் நிலையில், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாற்று இடங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளன. 
 
தடம் எண். 21, 41D, S17, 49K மற்றும் S5 ஆகியவை மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கும், தடம் எண். 49F பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், தடம் எண். 12M மற்றும் 5B ஆகியவை லஸ் கார்னர் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளன. 
 
மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு மற்றும் முதியவர்களுக்கான இலவசப் பயண டோக்கன்களைப் பெற விரும்புவோர் இனி பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லலாம். 
 
இந்த மாற்றம் குறித்த விரிவான தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி தமிழக போக்குவரத்து துறை கேட்டு கொண்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஎஸ் தான்: அண்ணாமலை