தமிழ்நாட்டில், அடுத்த சில மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை: திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில்.
இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.