Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளைக் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம் !

Advertiesment
மகளைக் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம் !
, சனி, 21 மார்ச் 2020 (16:17 IST)
சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த யுவராணி என்பவர் தன் கள்ளக்காதலனுக்கே தனது 19 வயது மகளைத் திருமணம் செய்து வைத்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் ஞானமணி நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கண்ணன். இவர் தனது அக்கா மகளையே திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கண்ணனுக்குப் பல பெண்களோடு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பல முறை அவரது மனைவி போலிஸில் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் கண்ணனுக்கு செங்கல்பட்டை சேர்ந்த யுவராணி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கண்ணனின் மனைவி போலிஸில் புகாரளித்துள்ளார். இந்த பிரச்சனையால் எங்கே கண்ணன் தன்னைவிட்டு பிரிந்து விடுவாரோ என்று அஞ்சி தன் 19 வயது மகளையே அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் யுவராணி. இந்த விஷயம் அறிந்து கண்ணனின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ணனை மனைவியோடு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அடுத்த நாளே அங்கிருந்து அவர் சென்ற கண்ணன், தன் மனைவிக்கு போன் செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் கண்ணனின் மனைவி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரைக் காப்பற்றிய உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கண்ணனின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுக்கடைகளை மூட இன்னும் என்ன தயக்கம்? அரசுக்கு ராமதாஸ் கேள்வி ...