ஜோலார் பேட்டையில் ஹவுரா செல்லும் ரயில் நிற்கும் போது அதன் எஞ்சின் பெட்டியின் மேலேறி ஒருவர் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்ற போது பிளாட்பார்மில் இருந்த நபர் ரயில் எஞ்சின் பெட்டி மேல் ஏறி உட்கார்ந்துகொண்டார். அவரை எவ்வளவோ வற்புறுத்தியும் இறங்காததால் ரயில்வே ட்ராக் மேல் இருந்த மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் ரயில்வே போலிஸார் வந்து கீழே இறக்கினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணம் செய்ததால் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதித்தாலும், அவரிடம் ஊருக்கு செல்ல காசு இல்லாததால் இதுபோல செய்ததாகவும் கூறியுள்ளார்.