Publish Date: Wed, 17 Feb 2021 (13:03 IST)
Updated Date: Wed, 17 Feb 2021 (13:04 IST)
நாடு முழுவதும் சமயபுரத்தில் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் பாஸ்ட்டேக் முறைக்கு மாறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது
இந்த அறிவிப்புக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன நிலையில் தற்போது தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் இதுகுறித்து போராட்டமொன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக வாகனம் வைத்திருப்பவர்கள் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் பாஸ்ட்டேக் முறைக்கு மாறாக வாகனங்கள் இருமடங்கு கட்டணத்தை சுங்கச்சாவடியில் செலுத்த வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது
இந்த நிலையில் டீசல் விலை மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக்கில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். இந்த போராட்டத்தின் முழுவிபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது